பதிவு செய்த நாள்
06
ஜூலை
2017
01:07
குமாரபாளையம்: குமாரபாளையம், பாண்டு ரங்கர் கோவிலில், கொடியேற்று விழா நடந்தது. குமாரபாளையம், பாண்டு ரங்கர் கோவிலில், 90வது ஆண்டு ஆஷாட சுத்த சயன ஏகாதசி விழாவை முன்னிட்டு, கடந்த, 3ல் கொடியேற்றம் நடந்தது. கடந்த, 4 மற்றும் நேற்று காலை கோவில் பஜனை குழுவினரால் சிறப்பு பஜனை மற்றும் வழிபாடு நடந்தது. மேலும், காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பாண்டுரங்கர், மகாலட்சுமி, விடோபா தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.