சிவனை ஓம் சிவாய நம என்ற மந்திரம் ஓதி வணங்குகிறோம். இம்மந்திரம் பல தத்துவங்களை உணர்த்துகிறது. சி எனும் எழுத்து சிவனையும், வா எனும் எழுத்து அம்பாளையும், ய எனும் எழுத்து மனிதர்களையும், நம என்னும் சொல் வணங்குவதையும் குறிக்கிறது. இந்த மந்திரத்தைச் சொன்னால் ஆணவம், கன்மம் என்னும் பாவ, புண்ணியங்களால் ஏற்படும் பலன்கள் மற்றும் உலகவாழ்க்கை நிலையானது என்னும் மாயையிலிருந்து விடுபடலாம். பிறப்பற்ற வாழ்வைத் தரும் அருமருந்தாக இந்த மந்திரம் விளங்குகிறது.