இறைவனின் அருட்சக்தியாக திகழும் தேவிக்கு பிடாரிதேவி என்ற பெயரும் உண்டு. இது பீடோபஹாரி எனும் சமஸ்கிருத சொல்லில் இருந்து வந்தது. இதற்கு பீடைகளை நீக்குபவள் என்று பொருள். கிராமங்களில் இவளை முப்பிடாரி அல்லது முப்பிடாதி என்ற பெயரால் காவல் தெய்வமாக வணங்குகின்றனர். பொதுவாக இவளது சன்னதி வடக்கு நோக்கி இருக்கும்.