புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2017 02:07
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா, பகவான் சத்ய சாய்க்குப் பிடித்தமான பக்தி பாடல்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் சத்ய சாய் கல்வி நிறுவனங்களில் சிறந்து விளங்கிய 14 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை சத்ய சாய் அறக்கட்டளை உறுப்பினர் நீதிபதி (ஓய்வு) ஸ்ரீ ஏ.பி. மிஸ்ரா வழங்கினார். முன்னதாக, சத்ய சாய் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், டாக்டர் பி.ஜே. பிட்ரே உரையாற்றினார். தொடர்ந்து பஜனை துவங்கியது. சுவாமிக்கு பிடித்தமான பாடல்கள் பாடப்பட்டன. விழாவில் திருமதி.சாருமதி ரகுராமனின் வயலின், அனந்த ஆர் கிருஷ்ணன் அவர்களின் மிருதங்க பக்தி இசைமழையில், பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பஜனையின் நிறைவில் மங்கல ஆரத்தி காட்டப்பட்டது.