நாமக்கல்: நாமக்கல், ஆன்மிக இந்து சமய பேரவை சார்பில், குடவரை ரங்கநாதர் கோவில் அடிவாரத்தில், வீர ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்த ஓராண்டு நிறைவு விழா நடந்தது. பேரவை கவுரவ தலைவர் ஏகாம்பரம் தலைமை வகித்தார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முன்னதாக இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது. முடிவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தலைவர் மனோகரன், அமைப்பாளர் குணசீலன் உள்பட பலர் பங்கேற்றனர்.