பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
12:07
உத்திரமேரூர்: காட்டுப்பாக்கத்தில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, காட்டுப்பாக்கத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா நடத்தப்படும். அதன்படி, 9ல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் உள்ள விநாயகர் மற்றும் அனைத்து அம்மன் கோவில்களுக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை, 11.00 மணிக்கு, மலரால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன், கெங்கையம்மன் மற்றும் முத்துமாரியம்மன் அப்பகுதி வீதிகளில் வந்தனர். பக்தர்கள், ஊர்வலமாக குடம் சுமந்தபடியும், வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். அதை தொடர்ந்து, மாலை 2:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழா நடை பெற்றது.