வடுக்குப்பம் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2017 12:07
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் கிராமத்தில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஆனி மாத திருவோணத்தை முன்னிட்டு, காலை 10.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து பெருமாள் திருவேங்கடமுடையான் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடுக்குப்பம் கிராம மக்கள் செய்தனர்.