கம்பம், மாவட்டத்தில் கடந்தாண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இந்தாண்டும் இதுவரை தென்மேற்கு பருவமழை போக்குகாட்டி வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில் கம்பம் நகராட்சி சார்பில் லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயிலில் மழை வேண்டி பிரார்த்தனை நடந்தது. கிடா வெட்டி பொங்கல் வைத்து விருந்து படைத்தனர். இதில் கமிஷனர், பொறியாளர், உதவி பொறியாளர், பணியாளர்கள் பங்கேற்றனர்.