பதிவு செய்த நாள்
22
நவ
2011
11:11
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் சின்ன, பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று இரவு 9 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது. கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, இன்று இரவு, 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. நவம்பர் 24ம் தேதி இரண்டு கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு, பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. டிச., 3ல் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், மாலையில் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6ம் தேதி இரு கோவிலிலும் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு எடுத்தலும் நடக்கிறது. டிச., 7ம் தேதி கம்பம் எடுத்தல், 8ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அருள் குமார், தக்கார் சுப்பிரமணி உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.