திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அருகே செருவாலி எஸ்டேட்டில் விமான நிலையத்தை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. சபரிமலையிலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டயம் மாவட்டம் செருவாலி எஸ்டேட்டில் 2 ஆயிரத்து 263 ஏக்கர் நிலப்பரப்பில் பசுமை விமான நிலையத்தைக் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், உலகெங்கிலும் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் வருகை தருவது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.