பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
12:07
சேலம்: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நேற்று, சேலம், கோட்டை மாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன், டவுன் கன்னிகா பரமேஸ்வரி, குமாரசாமிபட்டி எல்லைப்பிடாரி அம்மன், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில்களில், அதிகாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பெண் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு, மஞ்சள், குங்குமம், தாலி கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது.
* சேலம், சிவதாபுரம் பாலநாகத்தம்மன் கோவிலில், வேப்பிலை காப்பு சிறப்பு அலங்காரம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், வேப்பிலையை ஆட்டுகல்லில் அரைத்து சாந்து எடுத்து அம்மனுக்கு அலங்காரம் செய்ய கொடுத்தனர். பின், சாந்து முழுவதும் அம்மன் உடலில் சாத்தப்பட்டு, அடுத்தநாள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மேலும், சங்ககிரி கிரி காலனியில் உள்ள காசி விசாலாட்சி, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
* ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு சிறப்பு அபி?ஷகம், பூஜை செய்து, அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பெண்கள், மழை வேண்டி, கூழ் படையல் செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்தனர். கோட்டை சம்போடை வன மதுரகாளியம்மன், சிவாஜி தெரு திருவிழி அம்மன், கோவிந்தன் தெரு மாரியம்மன், ஏத்தாப்பூர் மாரியம்மன் கோவில்களில் பூஜை நடந்தது.