பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
12:07
சேலம்: கோட்டை மாரியம்மன் கோவிலில், முகூர்த்தக்கால் நடப்பட்டது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆகம விதிக்கு எதிராக, கட்டுமானப் பணி நடப்பதாக, பல்வேறு பிரச்னை எழுந்தது. இதனால், நடப்பாண்டு ஆடிப்பெருவிழா நடக்குமா என, சந்தேகம் எழுந்தது. பக்தர்கள், திருவிழாவை நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக ஆலோசித்த அறிநிலையத்துறை அதிகாரிகள், கட்டுமானப் பணியை கருதி, ஆடி பெருவிழாவுக்கு பதில், ஆடித்திருவிழா நடத்துவதாக அறிவித்தனர். அதற்கு, வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தது. இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. வரும், 25 இரவு, 8:00 மணிக்கு பூச்சாட்டுதல் விழா, ஆக., 7ல் சக்தி அழைப்பு, 9, 10, 11ல் பொங்கல் பிரார்த்தனை, 15ல் பால்குட ஊர்வலம், சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது. ஆடித்திருவிழா தொடங்கியுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.