பதிவு செய்த நாள்
22
ஜூலை
2017
01:07
கிருஷ்ணகிரி: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் உள்ள கோவில்களில், நேற்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. பின்னர், வெற்றிலை அலங்காரத்தில் மாரியம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பெண்கள், சுவாமிக்கு கூழ்படையல் இட்டு வழிபாடு செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் வழங்கினர். இதே போல், புதுப்பேட்டை ஜோதிவிநாயகர் கோவில் தெருவில் உள்ள, முத்துமாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. பல்வேறு வகையான பழங்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பழையபேட்டை அங்காளம்மன் கோவிலில், அம்மனு க்கு அபிஷேகம் நடந்தது. முக்கிய கோவில்களில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.