பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2017 11:07
பரமக்குடி: ஆடி அமாவாசையையொட்டி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் கருடவாகனத்தில் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத, மந்திரம் முழங்க தீர்த்தவாரி நடத்தினர். பின்னர் பெருமாள் கருடவாகனத்தில் ரதவீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.