திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2017 11:07
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றத்தில் திரிபுர சுந்தரி அம்மன் ஆடிப்பூர தேர் திருவிழா நேற்று நடந்தது.திருக்கழுக்குன்றம் தாழக்கோவில் பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், 17ல் துவங்கி ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி, அம்மன் தினமும், தொட்டி, அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளிபக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அந்த வகையில் நேற்று, முக்கிய விழாவான தேர்விழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேர்களில் திரிபுர சுந்தரி அம்மன் எழுந்தருளி வீதிஉலா வந்தார். 27ல், திருக்கல்யாணப் பெருவிழா நிறைவடைகிறது.