காரைக்கால்: காரைக்காலில் ஆடி அமாவாசையொட்டி நேற்று கடற்கரையில் நித்திய கல்யாணப்பெருமாள் மற்றும் கைலாசநாதர் ஆகியோர் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று கடற்கரையில் காலையில் ஏராளமானவர்கள் இறந்த முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.பின் அதைத்தொடர்ந்து கடற்கரையில் எழுந்தருளிய நித்திய கல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் ஆகியோர் தீர்த்தவாரி நடந்தது.தீர்த்தவாரி முடிந்து நித்தியகல்யாண பெருமாள் மற்றும் கைலாசநாதர் சுவாமி ஆகியோர் கடற்கரை சாலை,நேருவீதி, மாதாக்கோவில்,பாரதியார் சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை கோவில்நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.