Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் முதன் முறையாக பிரசாதம் வழங்கல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் இனி ஏழு நாளும் உண்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி திவ்ய தரிசன டோக்கன் இனி ஏழு நாளும் உண்டு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
10:07

திருப்பதி: திருமலையில், வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது. திருப்பதி -- திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், விரைவாக ஏழுமலையானை தரிசிக்க, திவ்ய தரிசன டோக்கன் வழங்கும் முறையை, சில ஆண்டுகளுக்கு முன், தேவஸ்தானம் துவக்கியது. ஆனால், பாத யாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை, 50 ஆயிரத்தை தாண்டியதால், வார இறுதி நாட்களில், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை, இரண்டு வாரங்களுக்கு முன், தேவஸ்தானம் ரத்து செய்தது. அதன்பின், வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை மட்டும், 20 ஆயிரம் (அலிபிரியில், 16 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டில், 4,000) திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதனால், பாத யாத்திரை வந்த பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்குள், ஏழுமலையானை தரிசித்து வெளியேறினர். இந்நிலையில், கடந்த வாரம், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சோதனை முறையில், 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. அப்போதும், பக்தர்கள் எவ்வித காத்திருப்பும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில், சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது, மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது. அதனால், இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும், பாத யாத்திரை பக்தர்கள், 20 ஆயிரம் பேருக்கு, திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில், எட்டாம் ஆண்டு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 61 அடி உயர பாலமுருகன் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா ஸ்வாமி திருமடத்தில் சென்னை வேதபாரதி குருகுலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சென்னை: நாகப்பட்டினத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வில், 12ம் நுாற்றாண்டைச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar