படுநெல்லி: பொன்னியம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டிருந்தது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 26ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.நேற்று முன்தினம் காலை, இரண்டாம் கால பூஜை மற்றும் மாலை மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 8:30 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9:00 மணிக்கு கலசங்கள் மீது, புனித நீர் ஊற்றும் வைபவமும் நடந்தது.