பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள, ராஜராஜேஸ்வரி கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு நவதானிய அலங்கார பூஜை நடந்தது. கவுண்டம்பாளையம், துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளியையொட்டி, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில், அம்மன் நவதானிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.