ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பத்ரகாளியம்மன் சிலை கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2017 12:07
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வதம் செய்யும் தோற்றத்துடன், பீடத்துடன் கூடிய பத்ரகாளியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம் மலைப் பகுதியில் உள்ள பெத்தேல்புரத்திற்கும், புலிக்குத்திக்காட்டுக்கும் இடையே, பாலத்தின் அடியில் சிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரிமுத்து, துணை தாசில்தார் முத்துச்சாமி அங்கு சென்று சிலையை எடுத்து வந்து தாலுகா அலுவலகத்தில் வைத்து உள்ளனர்.
இச்சிலை பத்ரகாளியம்மன் வதம் செய்வது போல், பீடத்துடன் அமைந்துள்ளது. சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டதா அல்லது பித்தளையால் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர். சிலை அருகில் ஒரு சாக்குப்பையும் இருந்தது.சாக்குப்பையில் கட்டிக் கொண்டு வந்து இங்கு வீசியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தாசில்தார் கூறுகையில், “கண்டெடுக்கப்பட்ட சிலை 25 கிலோ எடை இருக்கும். ஐம்பொன்னால் செய்யப் பட்டதாக இருக்கலாம். அடுத்த கட்ட நடவடிக்கை மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி இருக்கும் ,” என்றார்.