பதிவு செய்த நாள்
01
ஆக
2017
02:08
நாமக்கல்: கொல்லிமலை, அறப்பளீஸ்வரர் கோவில், ஆடிப் பெருக்கு விழா துவங்கியது. கொல்லிமலையில், அறம் வளர்த்த நாயகி அம்மை உடனமர் அறப்பளீஸ்வர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக நடக்கும். இந்நதாண்டு விழா, நேற்று, கோவில் வளாகத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றினர். முன்னதாக, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று காலை, அறப்பளீஸ்வரர் சுவாமி, அறம் வளர்த்த நாயகியம்மன், பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை செய்யப்படுகிறது. நாளை, சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம், சிறப்பு ஆராதனை நடக்கிறது. வரும், 3ல், அலங்கரிக்கப்பட்ட சப்பாரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளி, வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வரும், 4ல் சுவாமி வீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.