பதிவு செய்த நாள்
01
ஆக
2017
02:08
ஈரோடு: ஈரோடு கோட்டை, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா, கடந்த, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து மாணிக்கவாசகர் விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் விழா, சுந்தரர் தேவாரம் முற்றோதுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நான்காம் நாளான நேற்று, அறுபத்து மூவர் சிறப்பு அபி?ஷகம், திருவீதியுலா புறப்பாடு நடந்தது. அனைத்து மூல மூர்த்திகள், உற்சவ மூர்த்திகள், அறுபத்து மூவருக்கும், காவிரி தீர்த்தத்தால் சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. அபி?ஷக நிகழ்ச்சியில், யானை வாகனத்தில் விநாயகர், மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை, காமதேனு வாகனத்தில் வாரணாம் பிகையம்மன், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காளை வாகனத்தில் சண்டிகேஸ்வரர், ஆகியோர் அறுபத்து மூவர் முன்னிலையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதை தொடர்ந்து மகா தீபாராதனை, மாலையில் திருவீதி உலா நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தனித் தனியாகவும், நாயன்மார்கள் ஒரே புஷ்ப விமானத்திலும் மாநகரை வலம் வந்தனர்.