பதிவு செய்த நாள்
01
ஆக
2017
02:08
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை திருவிழா கடந்த, 14ல், முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 25ல் பூச்சாட்டுதல், 27ல், கம்பம் நடப்பட்டது. நேற்று காலை, 7:00 மணியளவில், வேத மந்திரங்கள் ஒலிக்க, அம்மன் கருவறை நேர் எதிரே உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்து, கொடியேற்றப்பட்டது. அர்ச்சகர் முத்துகுமார் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து, மேளதாளம் முழங்க, அம்மன் தேருக்கு, ஆயக்கால் நட்டு, கற்பூர தீபாராதனை நடந்தது. அதன்பின், பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 8ல், அலகு குத்துதல், சக்தி அழைப்பு, உருளு தண்டம், 9ல், பொங்கல் வைபவம், 11ல், தேரோட்டம், 13ல், வண்டிவேடிக்கை நடக்கிறது.