பதிவு செய்த நாள்
01
ஆக
2017
02:08
சென்னிமலை: சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமிக்கு, 1,008 குடம் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. சென்னிமலையில், மலை மீது அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற முருகன் கோவில் சுப்பிரமணியருக்கு ஆண்டுதோறும், ஆடி மாத விசாக நட்சத்திரத்தில், சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பாலாபிஷேக விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு, 50வது ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 8:30 மணியளவில், 1,008 பால் குடங்களுடன் பக்தர்கள், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, காவடி ஆட்டத்துடன், நான்கு ரத வீதிகளிலும், திருவீதி வந்து மலை கோவிலை படி வழியாக அடைந்தனர். பின்னர் சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.