ராமநாதபுரம் : ராமநாதபுரம் சவேரியார் ஆலய விழா கொடியேற்றம் நடந்தது. மறைவட்ட அதிபர் இருதயராஜ், உதவி பங்குதந்தை ஜஸ்டின் திரவியம், கொடி ஏற்றி, திருப்பலியை துவக்கி வைத்தனர். முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி டிச.,2லும், கொடியிறக்கும் டிச.,3லும் நடக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு ஜெபம் மற்றும் திருப்பலி, சிறப்பு மறையுரை நடக்கிறது. டிச.,1ல் மாலை 5 மணிக்கு பாவமன்னிப்பு வழிபாடு நடக்கிறது.