காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கணிகண்டீஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறைகள் முற்றோதல் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கயிலாயப் பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் சைவத் தொண்டர்கள் சார்பில், மாணிக்கவாசர் எழுதிய திருவாசகம், 650 பாடல்கள் பாடும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் தாயார் குளம் தெருவில் உள்ள கணிகண்டீஸ்வரர் கோவிலில் நடந்தது. காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு வாரமும், ஒரு சிவன் கோவிலில் இந்த பன்னிரு திருமுறை பாடும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இந்த அமைப்பு சார்பில் சைவத்திருமுறை நேர்முக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.