பதிவு செய்த நாள்
01
ஆக
2017
03:08
மப்பேடு: கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அமைந்துள்ளது ஓசூரம்மன் கோவில். இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம், மூன்றாம் வாரம் தீமிதி திருவிழா நடநது வருகிறது. இந்த ஆண்டு, தீமிதி திருவிழா, ஆக., 6ல் நடைபெற உள்ளது. முன்னதாக, தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், கடந்த, 28ல், கோவில் வளாகத்தில் காப்பு கட்டி விரதத்தை துவக்கி உள்ளனர். பின், காலை, மாலை வேளைகளில், ஓசூரம்மன் வீதிஉலா நடந்து வருகிறது. ஆக., 6 காலை 6:00 மணிக்கு, காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் பங்கேற்கும் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.அதன்பின், ஓசூரம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும். அதன் பின், ஆக., 7ல், காலை விடையாற்றி உற்சவத்துடன் தீமிதி திருவிழா நிறைவு பெறும்.