க.பரமத்தி: கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடி பூரம் நட்சத்திர விழா முன்னிட்டு கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. வழிபாட்டு மன்றத் தலைவர் சுமதி, விழாவை துவக்கி வைத்தார். பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், தேர் வீதி ஆகிய முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், வழிபாட்டு மன்ற கோவிலை சென்றடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஊர்வலமாக கஞ்சிக்கலயத்தைக் கொண்டு சென்றனர். பின், வேள்வி பூஜைகளை நடத்தி, பக்தர்கள் வழிபாடு செய்தனர். பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், வழிபாட்டு மன்ற பொருளாளர் சேகர், துணைத் தலைவர் செல்வி, செயலாளர் ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.