நாகர்கோவில்: தமிழகம், கேரளாவில் பிரசித்தி பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்கள் தலையில் இருமுடிக் கட்டு ஏந்தி வழிபடுவதால், பெண்களின் சபரிமலை என, இக்கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு மாசிக்கொடை விழாவின் போது நடக்கும், சக்கர தீவெட்டி ஊர்வலம், ஒடுக்கு பூஜை, பிரசித்தி பெற்றவை.தற்போது, அம்மன் தங்கரத அறக்கட்டளை சார்பில்,தங்கத்தேர் காணிக்கையாக வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் நன்கொடை மூலம் தேர் செய்யப்படுகிறது. மயிலாடியில் இதற்கான பணிகள் துவங்கி உள்ளன.