திருவள்ளூர்: திரவுபதி அம்மன் கோவில், தீ மிதி திருவிழாவில், ஏராள மானோர் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டோர், அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.