பதிவு செய்த நாள்
08
ஆக
2017
01:08
சோமங்கலம்: பெரியபாளையத்தம்மன் கோவிலில், நேற்று முன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. குன்றத்துார் ஒன்றியம் சோமங்கலம் ஊராட்சியில், பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி மூன்றாவது வாரம், தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீ மிதி திருவிழா, வெள்ளிக்கிழமை துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் விரதம் இருந்து, காப்பு கட்டி, தீ மிதித்தி நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், சோமங்கலம், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், மணிமங்கலம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புறத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.