பதிவு செய்த நாள்
11
ஆக
2017
12:08
நெம்மேலி: ஆளவந்தார் குருபூஜை விழா, கோலாகலமாக நடந்தது. நெம்மேலியை சேர்ந்தவர் ஆளவந்தார் நாயகர். தனக்கு சொந்தமான, 1,000 ஏக்கர் நிலத்தை, தமிழக இந்து சமய அறநிலையத்துறையிடம் தானமாக ஒப்படைத்ததைத் தொடர்ந்து, இத்துறை, அவரது பெயரில் அறக்கட்டளை இயங்குகிறது.இவர் பிறந்த பூரட்டாதி நட்சத்திர நாளான நேற்று, குருபூஜை உற்சவம் நடந்தது. திருமஞ்சன வழிபாடு நடத்தி, மாமல்லபுரம், திருவிடந்தை கோவில்களின் பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது. திருவாய்மொழி சேவையாற்றி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செயல் அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.