பதிவு செய்த நாள்
11
ஆக
2017
12:08
ஊத்துக்கோட்டை: மாரியம்மனுக்கு நடந்த ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். ஆடி மாதத்தை ஒட்டி, ஊத்துக்கோட்டையில், இரு தினங்களாக ஜாத்திரை விழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த, 6ம் தேதி, ஏரிக்கரை அருகே உள்ள கிராமதேவதை செல்லியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடை பெற்றது. கிராம பெண்கள், காலை, 9:00 மணிக்கு, பொங்கல் வைத்து, அம்மனுக்கு படை த்து வழிபட்டனர். மதியம், 3:00 மணிக்கு, எல்லை
யம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் பொ ங்கல் வைத்தனர். பின், ஒவ்வொரு நாளும் கரகம் எடுத்துக்கொண்டு கிராமத்தை சுற்றி வலம் வந்தனர். நேற்று முன்தினம் இரவு, மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் படையல் இட்டு, ஆடு வெட்டி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று மாலை , ரெட் டித்தெருவில் இருந்து, வேப்ப இலை ஆடை அணிந்தும், உடலில் அலகு குத்திக்கொண்டும் நடந்து சென்று, மாரியம்மனை வலம் வந்து, தங்களது வேண்டுதலை நிறைவேற்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து க�ொண்டு அம்மனை வழிபட்டனர்.