பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் பூஜைகள் நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பொள்ளாச்சி குமரன் நகர் கன்னிமுத்து மாரியம்மன் கோவிலில், தெய்வகுளம் காளியம்மனம் கோவிலில் இருந்து தீர்த்தகாவடி எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு அபிேஷக பூஜை நடந்தது; அன்னதானம் வழங்கப்பட்டது.