திருவாடானை, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருவாடானை பஸ்ஸ்டாண்டில் உள்ள ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் லட்சுமிவிநாயகர், தொண்டி இரட்டை பிள்ளையாருக்கு சிறப்பு அபிேஷங்கள் நடந்தது. விநாயருக்கு அரும்புல் மாலை அணிவிக்கபட்டு, பால், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம் போன்ற அபிேஷகங்கள் நடந்தன. பின்பு கொழுக்கட்டை படைக்கபட்டது. பக்தர்கள் கோயிலில் அமர்ந்து விநாயகர் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.