பதிவு செய்த நாள்
12
ஆக
2017
02:08
காஞ்சிபுரம்:விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் அதை சுற்றியுள்ள பகுதிகளில், பல வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு தயாராக இருக்கின்றன.வரும், 25ம் தேதி, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவிற்காக, காஞ்சிபுரம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி முடிந்து, விற்பனைக்கு வந்துள்ளன.கிருஷ்ணன் விநாயகர், சிவன் விநாயகர், தலப்பாகை கட்டி விநாயகர், ராஜ விநாயகர், சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் உட்பட பல வடிவங்களில், விநாயகர் சிலைகள், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில், விற்கப்படுகின்றன. இது குறித்து சிலை விற்பனையாளர் சக்தியப்பன் கூறியதாவது: சிலைகள் செய்வதற்கு இடம், அதற்கான மூலப்பொருள் வாங்குவதற்கு, முதலீடு அதிகம். அதனால், விநாயகர் சிலைகளுக்கான பாகங்களை மட்டும் பல இடங்களில் தயாரிக்கின்றனர். அவற்றை விலைக்கு வாங்கி, நாங்கள் இணைத்து, அதற்கு தகுந்த கலர் பூசி விற்கிறோம். 3,000 - 10 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.