பதிவு செய்த நாள்
28
நவ
2011
12:11
திருநெல்வேலி : பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஆலய வளாகத்தில் பொதுமக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பாளை., தூய சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24ம்தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியின் 3ம் நாளான நேற்று காலை பாளை., அரசு ஊழியர் குடியிருபுபு, ஜவகர் நகர் பங்குதந்தை சந்தியாகு திருப்பலி நிகழ்த்தினார். பேட்டை பங்குதந்தை செல்வன் மறையுரை ஆற்றினார். மாலையில் பாளை., மறை மாவட்ட பொருளாளர் மரிய பிரான்சிஸ் திருப்பலியையும், அம்பாசமுத்திரம் மறை வட்ட அதிபர் அருள் அம்புரோஸ் மறையும் ஆற்றினர். தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய பங்குதந்தை அந்தோணிராஜ், உதவி பங்கு தந்தை பிரிட்டோ, சுரேஷ்குமார், நாட்டார்குளம் பங்குதந்தை இருதயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேராலய பங்கு மக்கள், பங்கு பேரவையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அசன விருந்தை வாங்கி சென்றனர். இதனை முன்னிட்டு ஆலய வளாகத்தில் மாநகர போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை பேராலய அசனக்குழுவினர் செய்திருந்தனர். இன்று(27ம்தேதி) மாலை 6மணிக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் நிகழ்ச்சியும், வரும் டிசம்பர் 2ம்தேதி மாலை வழிபாடு, பாதுகாவலரின் திருவுருவப்பவனியும் நடக்கிறது. 3ம்தேதி பெருவிழா திருப்பலி, புதுநன்மை விழாவும், மாலையில் கொடியிறக்கம் மற்றும் கலை விருந்தும், 4ம்தேதி காலை 7.30 மணிக்கு உறுதிபூசுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.