பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த, எளையம்பாளையம் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், சக்தி கணபதி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 25 மாலை கணபதி பூஜையுடன் துவங்கியது. மூன்று நாட்கள் யாக சாலை பூஜையை தொடர்ந்து, நேற்று, சுபமங்கள சக்தி விநாயகர் விமான கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு சுபமங்கள சக்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் செயலர் கருணாநிதி, அறக்கட்டளை உறுப்பினர் கிருஷ்ணவேணி கருணாநிதி, செயல் இயக்குனர் அர்த்தநாரீஸ்வரன், இயக்குனர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், அறக்கட்டளை உறுப்பினர் கிருபாநிதி கருணாநிதி, நிவேதனா கிருபாநிதி, பேபி நிதிவர்ஷிகா மற்றும் கல்வி நிறுவனங்களின் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.