சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2017 11:08
நாகர்கோவில்: சுசீந்திரம் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் பெருமாள் சன்னதி உள்ளது. இங்கு ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறும். நேற்று காலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர், காலை 10 மணிக்கு கோயில் பூஜாரி சங்கர நாராயணரரு கொடியேற்றினார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. விழா நாள்களில் காலையிலும், மாலையிலும் சிறப்பு பூஜைகளும், ஸ்ரீபலி பூஜைகளும் நடக்கிறது. செப்.5ம் தேதி மாலை 5:00 மணிக்கு இந்திரன் தேரில் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளுகின்றனர். செப்.6ம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.