பதிவு செய்த நாள்
29
ஆக
2017
11:08
சென்னை : வி.பி.ஜே., எனப்படும், உம்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், அமெரிக்காவில் உள்ள, சிவா - விஷ்ணு கோவிலுக்கு வழங்குவதற்காக, தங்கம் மற்றும் வைரங்களால் ஆன, அழகிய அணிகலன்களை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள, லிவர்மோர் என்ற இடத்தில், சிவா - விஷ்ணு கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, அமெரிக்க வாழ் இந்து பக்தர் ஒருவர், அபயஹஸ்தம், கதிஹஸ்தம், சங்கு, சக்கரம் ஆகிய அணிகலன்களை காணிக்கையாக வழங்க விரும்பினார். அவர், அவற்றை உருவாக்கி தருவதற்கான ஆர்டரை, வி.பி.ஜே., நிறுவனத்திற்கு வழங்கினார். இதையடுத்து, வி.பி.ஜே., 4.2 கிலோ தங்கம் மற்றும், 250 காரட் வைரங்களை பயன்படுத்தி, சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆபரணங்களை, நவீன முறையில், அழகிய வடிவமைப்புடன், நேர்த்தியான முறையில் உருவாக்கிஉள்ளது. இவை, அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு, விரைவில் அனுப்பப்பட இருக்கிறது.