திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் சார்பில்‚ கஞ்சிகலைய ஊர்வலம் நடந்தது. திருக்கோவிலுார்‚ என்.ஜி.ஜி.ஓ.‚ நகரில் உள்ள ஆதிபராசக்தி மகளிர் வழிபாட்டு மன்றம் சார்பில்‚ மழை வேண்டி கஞ்சிகலைய ஊர்வலம் நடந்தது. மன்றத்தின் தலைவர் ஞானாம்பாள் தலைமை தாங்கினார். கோவிலில் இருந்து செவ்வாடை அணிந்த பக்தர்கள் கஞ்சிகலையம்‚ முளைப்பாரி‚ தென்னம்பாலை‚ அக்னிச்சட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். மன்ற பொருளாளர் சாந்தி வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் விழா ஏற்பாடுகளை செய்தனர்.