நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை அடுத்து, மண்டல பூஜை துவங்கியது. நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று, முதல்நாள் மண்டல பூஜை துவங்கியது. குறிப்பிட்ட பிரிவு சார்பில் இவ்விழா நடந்தது. காலை, பெருமாள் கோவிலில் இருந்து, பெண்கள் தீர்த்தக்குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.