* நம் வாழ்வை போல, உலகிலுள்ள மற்றவர்களும் நலமுடன் வாழ வழிபாடு செய்ய வேண்டும். * கடவுள் மீது பக்தி செலுத்தவே மனிதர்களாக பிறந்திருக்கிறோம். பிறப்புக்கு காரணமான பெற்றோரே நம் முதல் தெய்வங்கள். * விரதத்தால், உடல் மட்டுமல்லாமல் உள்ளமும் ஆரோக்கியம் பெறுகிறது. மனதுக்கு அமைதியும் ஏற்படுகிறது. * வழிபாட்டால் விதியின் கடுமை குறைகிறது. ஆனால் விதியின் பலனை யாராலும் அழிக்க முடியாது. * இன்பத்தில் மனிதன், கடவுளை மறந்து ஆணவத்துடன் அலைகிறான். துன்பத்தில் கடவுளின் திருவடியே கதி என்று சரணடைகிறான். * ஆபத்து நேரும் சமயத்தில் அதிலிருந்து தப்பிக்க நாம் எது செய்தாலும் அது தவறாகாது. * தனக்குரிய கடமையை சரிவர செய்வது தர்மம். கடமை தவறுவது, செய்யாமல் புறக்கணிப்பது, அதை மறப்பது அதர்மம்.