பதிவு செய்த நாள்
30
ஆக
2017
11:08
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில் தைலகாப்பு பூர்த்தியில், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாள கிராம மேனி கொண்ட (சுதை சிலை) பெருமாள் சிலைகளுக்கு, அபிஷேகம் செய்யப்படுவதில்லை. இதனால் தைலக்காப்பு சாற்றப்படுகிறது. ஈரோடு கஸ்தூரி ரங்கநாதர் கோவிலில், இதற்கென கடந்த பத்து நாட்களாக, தைலம் காய்ச்சப்பட்டது. சந்தனம், அகில், பச்சை கற்பூரம் உள்ளிட்ட, எட்டு வகையான வாசனை திரவிய பொருட்களை கொண்டு, தைலம் காய்ச்சும் பணி நடந்தது. தைலப்பானையுடன் கோவிலை சுற்றி வந்து, மூலவருக்கு தைலக்காப்பு சாற்றப்பட்டது. தைல காப்பால் 48 நாட்களுக்கு பெருமாளை முழுமையாக தரிசிக்க முடியாது. முகம், பாதங்களை மட்டும் பக்தர்கள் தரிசித்தனர். விழாவை முன்னிட்டு, தைலகாப்பு பூர்த்தியில், உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.