பதிவு செய்த நாள்
30
ஆக
2017
01:08
கரூர்: கரூர், தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், செப்., 2 முதல் திருப்பவித்ரோத்ஸவ விழா துவங்குகிறது. அன்று மாலை, 6:00 மணிக்கு விசேஷஆராதனை, சங்கல்பம், வாஸ்து சாந்தி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு அக்னிபிரதிஷ்டை, 9:30 மணிக்கு மூர்த்தி ஹோமம், நித்யஹோமம் நடக்கிறது. செப்., 4 காலை, 6:00 மணிக்கு மகாபூர்ணாஹூதி, 9:15 மணிக்கு கடம்பெருமாள் திருவீதி புறப்பாடு, புஷ்பாஞ்சலி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சூரியநாராயணன், இணை ஆணையர் கல்யாணி செய்து வருகின்றனர்.