வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி, சனிபபெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நாளை (செப்.2) காலை 9:.31 மணிக்கு குருபகவான் சித்திரை நட்சத்திரம் 3 ம் பாதமான கன்னி ராசியில் இருந்து அதே நட்சத்திரம் 3 ம் பாதத்தில் உள்ள துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது சைவ சமயக் கோயில்களில் நவக்கிரஹங்கள் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் பெயர்ச்சி வழிபாடு நடைபெறும். அதன்படி வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை நடைபெறவுள்ளது. நவக்கிரஹ சன்னதியில் உள்ள குருபகவானுக்கும், தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள தட்ஷிணாமூர்த்திக்கும் பூரண கும்பம் வைத்து யாகபூஜைகளுடன் வழிபாடு நடக்க உள்ளது. அத்துடன் இந்த குருப்பெயர்ச்சியால் பலனடையும், பாதிப்புக்குள்ளான பலன் ராசிதாரர்களுக்கு தனித்தனியே சிறப்பு வழிபாடு, அர்ச்சனையும் நடைபெறவுள்ளது. கோயில் செயல் அலுவலர் சுந்தரராசு, பக்தர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.