பதிவு செய்த நாள்
02
செப்
2017
02:09
பவானி: கும்பாபிஷேக விழாவை ஒட்டி, பக்தர்கள் புனித தீர்த்தக்குடம் சுமந்து, ஊர்வலம் சென்றனர். பவானி, குருப்பநாயக்கன்பாளையம், காடையம்பட்டி, ஆண்டிக்குளம் ஏரிக்கரையில் உள்ள புடவை காரியம்மன் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. இதேபோல் பெத்தாரப்பன், அய்யனாரப்பன், பாட்டன் கோவிலில், வரும், 4ல் கும்பாபிஷேகம் விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை, கூடுதுறையில் இருந்து, புனித தீர்த்தம் எடுத்து, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். பவானி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், அய்யனாரப்பன் கோவிலை அடைந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.