சபரிமலையில் திருவோண பூஜை நிறைவு: புரட்டாசி பூஜைக்கு செப்.16ல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07செப் 2017 11:09
சபரிமலை: திருவோண பூஜைகள் முடிந்து சபரிமலை கோயில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. இனி புரட்டாசி மாத பூஜைகளுக்காக செப்.16-ம் தேதி நடை திறக்கும். திருவோண பூஜைகளுக்காக செப்.2ம் தேதி மாலையில் சபரிமலை நடை திறக்கப்பட்டது. செப்.3ம் தேதி முதல் நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடந்தன. ஓண விருந்தும் நடந்தது. நான்கு நாட்கள் பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அடுத்து புரட்டாசி மாத பூஜைகளுக்காக செப்.16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். செப்.17 முதல் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். செப்.21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.