பழநி அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2017 10:09
பாலசமுத்திரம்: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாட நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணிபிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சப்பரம், பவளக்கால் சப்பரம், அனுமார், கருடன், அன்னம் போன்ற வாகனத்தில், வரதராஜப்பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் உலாவருவார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று( செப்09) தேரோட்டம் நடந்தது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடந்தது. வரதராஜப் பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தேரில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.