கம்பம், கம்பம் நவநீத கிருஷ்ணர் கோயிலில் நேற்று முன்தினம் முதல் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டங்கள் துவங்கியது. முன்னதாக கம்பராயப் பெருமாள் கோயில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, கருடாழ்வார் வாகனத்தை அழைத்து சென்றனர். பின்னர் கோயிலில் கிருஷ்ணருக்கு பல்வேறு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா வந்தார். மெயின்ரோடு, காந்திசிலை, பார்க்ரோடு, வேலப்பர் கோயில் வீதி வழியாக கம்பராயப் பெருமாள் கோயில் சென்றடைந்தார். தொடர்ந்து வழக்கு மரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் நடந்தன. இதில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை யாதவர் சமுதாய தலைவர் ராஜாமணி , இளைஞர் அணி நிர்வாகிகள் செய்தனர்.